விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் விஜய்யைச் சந்திக்கவுள்ளது பற்றி...

News image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதல்வர் விஜய். - ANI

Updated On :17 ஜூன் 2026, 11:42 am IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று சில கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக, 4 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது.

தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது.

இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

தொடர்ந்து வைகோவும் அவரது மகனும் எம்.பி.யுமான துரை வைகோவும் தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசவுள்ளார். நேற்று வைகோ, ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

MDMK chief vaiko meets CM vijay today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.