திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
AMMK General Secretary TTV Dhinakaran has stated that the failure to provide even basic amenities at Thiruparankundram is highly condemnable.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சிறுமி முதல் மூதாட்டி வரை வல்லுறவு! தவெக அரசின் கையாலாகத்தனம்! டிடிவி தினகரன்

சூலூர் சிறுமி கொலை: பெண்கள் பாதுகாப்பில் தனிகவனம் தேவை: முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!







