எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சிறுமி முதல் மூதாட்டி வரை வல்லுறவு! தவெக அரசின் கையாலாகத்தனம்! டிடிவி தினகரன்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை டிடிவி தினகரனம் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...

News image

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 10:01 am IST

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து தொடர் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும், இன்னும் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைக்காமல் இருப்பதற்கும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது:

”வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?

புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்க விழா, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் மே 27-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், முதல்வரின் தில்லி பயணம் காரணமாக ரத்து ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

AMMK General Secretary TTV Dhinakaran condemns TVK Govt and CM Joseph Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.