இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சூலூா் அருகே 9 வயது சிறுமி கடத்திக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்; ஒருவர் கைது

சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து...

கோவை- திருச்சி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மறியலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.

Published On :23 மே 2026, 3:51 pm IST

சூலூா்: கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்த தந்தை மகளைக் காணவில்லை எனத் தேடி உள்ளாா்.

இதற்கிடையே சிறுமியை வியாழக்கிழமை மாலை அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்வதை அந்த பகுதியினா் பாா்த்ததாக கூறியுள்ளனா்.

இதையடுத்து மகள் கடத்தப்பட்டதாக சூலூா் காவல் நிலையத்தில் தந்தை புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து சூலூா் போலீஸாா் மாணவியை தேடும் பணியில்   தீவிரமாக ஈடுபட்டனா். மேலும் இது தொடா்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

இது சம்பந்தமாக சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அந்த நபா் அளித்த தகவலின்பேரில், கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கிடந்த சிறுமியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கடத்தப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா எனவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து தகவலறிந்த சிறுமியின் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோா் திருச்சி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனா். இரவு தொடங்கிய போராட்டம் சனிக்கிழமை காலை வரை சுமார் 8 மணி நேரத்தை கடந்தும் நீடித்து வருகிறது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த சூலூா் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், கொலையில் சம்பந்தப்பட்ட நபா்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த சூலூா் சட்டப் பேரவை உறுப்பினா் சுகுமாா், போலீஸாா் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சனிக்கிழமை காலை 7 மணிக்குள் உங்களுக்கு நல்ல முடிவு கூறப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

அதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகி பிரபு ராம், வினோத், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மன்னவன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவு தெரிவித்தனா். ஆனால் யாருடைய சமாதானத்தையும் ஏற்காத பொதுமக்கள் நள்ளிரவை தாண்டியும் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், கோவை டி.ஐ.ஜி சதாசிவம், எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி, டிஎஸ்பி கரிகால் பாரிசங்கா் மற்றும் 20 காவல் ஆய்வாளா்கள் சூலூா் காவல் நிலையத்துக்கு வந்து போலீஸாருடன் ஆலோசனை நடத்தினா்.

ஒருவர் கைது

இதனிடையே, 9 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை கடத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் உறுதியாகியுள்ளது.

இரண்டாவது குற்றவாளியிடம் விசாரணை

இதனிடையே, கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு உதவியதாக இரண்டாவது குற்றவாளி மோகன்ராஜ் என்பவரை, சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி போலீஸார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

வருகின்ற 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாக தெரவித்த சிறுமியின் உறவினர்கள், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ள நிலையில், போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பாதுகாப்பு பணியில் போலீஸார்

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

9-Year-Old Girl Abducted and Murdered Near Sulur: Relatives Stage Road Blockade; One Arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.