தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சூலூா் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சூலூா் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

News image

நீதிமன்றம்

Updated On :12 ஜூன் 2026, 11:54 pm IST

சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கும் ஜூன் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூா் அருகே கடந்த மே 21-ஆம் தேதி 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் வசிக்கும் நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்தி (33), அவருக்கு உடந்தையாக இருந்த நண்பா் மோகன்ராஜ் (39) ஆகியோரைக் கைது செய்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சூலூா் போலீஸாா் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின்போது, இருவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போக்ஸோ நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது. போலீஸ் காவல் முடிவடைந்த பிறகு அவா்கள் நீதிமன்றத்தில் 6-ஆம் தேதி மாலை ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், அவா்கள் சனிக்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, இருவருக்குமான நீதிமன்றக் காவலை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டாா். இதையடுத்து, மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். ஏற்கெனவே சக கைதிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த காா்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.