ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பெயிலில் வந்த விவசாயி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுமி, அவரது குடும்பத்தினர் 2 பேர், தன்னுடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என ஆறு பேரைக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷபாத் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில், வெள்ளிக்கிழமை இந்த படுகொலைகள் நடந்துள்ளன. ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து சென்ற காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றி காவல்துறை கூறுகையில், பெயிலில் வெளியே வந்த விவசாயி, சிறுமியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளார். இவர் மீது கடந்த மே மாதம் சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் புகார் அளித்த நிலையில், அவர் கைதாகி பிணையில் வந்துள்ளார்.
கதவை தட்டிய நிலையில், சிறுமியின் தாய் கதவை திறந்தபோது, விவசாயி, அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். பிறகு, உள்ளே சென்று, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 60 வயது பாட்டியை குத்திக் கொலை செய்திருக்கிறார்.
ஆனால், அதே வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது சகோதரியை விவசாயி எதுவும் செய்யவில்லை. 16 வயது சிறுமியை தன்னுடைய காரில் கடத்திச் சென்று, கிராமத்துக்கு அருகில் உள்ள குளத்துக்கு அழைத்துச் சென்று அங்கு குத்திக் கொலை செய்து குளத்தில் உடலை வீசியிருக்கிறார்.
பிறகு, நேராக அவரது வீட்டுக்கு வந்த இரவு 11.21க்கு வந்த அவர், தன்னுடைய 31 வயது மனைவி, 4 வயது, 18 மாதங்களே ஆன இரண்டு மகன்களையும் கொலை செய்திருக்கிறார்.
கொலைகளை செய்துவிட்டு, தன்னுடைய தந்தைக்கு செல்போனில் அழைத்து கொலைச் சம்பவம் குறித்து தகவல் கொடுத்துவிட்டு, காரில் கிராமத்தை விட்டு தப்பியோடியிருக்கிறார்.
உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கொலைக் குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. புகார் கொடுத்த சிறுமியின் குடும்பத்தையும், தன்னுடைய குடும்பத்தினரையும் கொலை செய்யக் காரணம் என்ன என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









