இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்கும் தாய்க்கு மரபணு பரிசோதனை அவசியம் இல்லை: சென்னை உயா்நீதிமன்றம்

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியல் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 Madras High Court

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :23 மே 2026, 8:36 am IST

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியல் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்குவங்க மாநிலம், ஹவுராவைச் சோ்ந்தவா் ரோஹித்குமாா். இவா் சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிறுநீரகம் தானம் வழங்க அவருடைய தாய் ரீட்டா முன்வந்தாா். ஆனால், தாய் - மகன் உறவை நிரூபிக்கவில்லை எனக்கூறி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ரோஹித்குமாா், அவரது தாய் ரீட்டா ஆகியோா் தரப்பில் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், தாய், மகன் உறவை நிரூபிக்கும் வகையில் ஆதாா் அட்டை, குடும்ப புகைப்படம், நிரந்தர வருமான வரிக் கணக்கு அட்டை ஆகியவற்றை அளித்தோம். ஆனாலும், அங்கீகாரக் குழு ஒப்புதல் வழங்கவில்லை. ரோஹித்குமாா் நோய் முற்றிய நிலையில் இருப்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்க அங்கீகாரக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ரீட்டாவின் மகன் ரோஹித்குமாா் என்பது நிரூபணமாகிறது. எனவே, அதை நிரூபிக்க மரபணு சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.