லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,001 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக, கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த மார்ச் 2 முதல் வியாழக்கிழமை (மார்ச் 19) வரை 1001 பேர் கொல்லப்பட்டதாக, லெபனானின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 79 பெண்கள் மற்றும் 118 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 2,584 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The death toll from Israel's ongoing attacks on Lebanon has risen to 1,001.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை



