கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டது குறித்து...

5 killed in Israeli attack in Lebanon

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்... - ஏபி | (கோப்புப் படம்)

Published On :

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனானின் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே புதிய அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், தெற்கு லெபனான் பகுதிகளைக் குறிவைத்து சனிக்கிழமை (ஜூன் 6) காலை இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

மார்ஜாயூன் மாவட்டத்தின் நபாட்டியே நகரத்தின் மீதான இந்தத் தாக்குதலில், லெபனான் ராணுவத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொல்லப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதேபோல், சாக்சாகியா கிராமத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அரசு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்த ஈரானிய அரசுக்கு, லெபனான் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரில், லெபனானில் 3,500 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that nine people, including Lebanese military officers, were killed in an attack carried out by Israel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.