/

உலகின் முதல் டிரில்லியனராகும் எலான் மஸ்க்! ரூ. 94.95 லட்சம் கோடியில் என்னவெல்லாம் செய்யலாம்?

உலகின் முதல் டிரில்லியன் என்ற சாதனையை எலான் மஸ்க் படைக்கவிருக்கிறார்.

News image

எலான் மஸ்க் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 4:11 pm IST

உலகின் முதல் டிரில்லியனர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெறவிருக்கிறார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், அடுத்த வாரம் முதல் உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையைப் படைக்கவிருக்கிறார்.

ஜூன் 12 ஆம் தேதியில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 55.5 கோடி பங்குகளை 135 அமெரிக்க டாலர் என்ற அளவில் பொதுவில் விற்கவுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் அதிக பங்குகளைக் கொண்டிருக்கும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்து, முதல் டிரில்லியனராக (இந்திய மதிப்பில் சுமார் 94.95 லட்சம் கோடி) உள்ளார்.

இந்த ஒரு டிரில்லியன் டாலர் மூலம் அவர் என்னவெல்லாம் செய்யலாம்?

நாள்தோறும் ஒரு மில்லியன் டாலர் செலவழித்தாலும், ஒரு டிரில்லியன் டாலரை செலவழிக்க 2,740 ஆண்டுகள் ஆகும். இது பண்டைய ரோம் நகரம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை உள்ள காலத்துக்குச் சமம்.

100 டாலர் பணத் தாள்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கினால், அதன் உயரம் 11,000 கி.மீ. என்றளவில் இருக்கும், இது சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை உயரத்தைப்போல 27 மடங்கு அதிகம்.

100 டாலர் பணத் தாளின் எடை ஒரு கிராம் எனக் கொண்டால், ஆயிரம் கோடி தாள்கள் வீதம், ஒரு டிரில்லியன் பணத் தாள்களின் எடை சுமார் 10,000 மெட்ரிக் டன் என்றிருக்கும். இது 1,600 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமமானது.

பாதுகாப்பு மிக்க வாகனங்களில் டிரில்லியன் டாலர் பணத்தை எடுத்துச்செல்ல வேண்டுமென்றால், 5 லட்சம் வாகனங்கள் தேவைப்படும். இந்த 5 லட்சம் வாகனங்களையும் வரிசையாக நிறுத்தினால், 3,000 கி.மீ.க்கும் நீளமாக இருக்கும்.

ஒரு டிரில்லியன் டாலர் இருந்தால், எலான் மஸ்க்கின் சொந்த ஊரான பிரிட்டோரியாவில் உள்ள அனைத்துச் சொத்துகளையும் பல மடங்கு வாங்க முடியும்.

இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் உள்ள 20 கால்பந்து கிளப்-களின் மொத்த மதிப்பு சுமார் 14.52 பில்லியன் டாலர் என்ற மதிப்பிடப்படும் நிலையில், ஒரு டிரில்லியன் டாலர் இருந்தால் பிரீமியர் லீக் முழுவதையும் வாங்க முடியும்.

Summary

Elon Musk is set to achieve the milestone of becoming the world's first trillionaire.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.