
நடுவானில் விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நாக்பூர் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் தக்காவுக்கு 126 பயணிகளுடன் சென்ற விமானம் இந்திய வான் எல்லையான ராய்ப்பூர் அருகே இன்று காலை பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
எனினும், விமானம் பறந்து கொண்டிருந்த பகுதிக்கு அருகே நாக்பூர் விமான நிலையம் இருந்ததால், விமானத்தை அங்கு திருப்பிவிட்டனர்.
இதையடுத்து, இன்று காலை 11.40 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் விமானியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால், அதில் பயணித்த 126 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிர் தப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.