
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாதின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினாா். ராஜேந்திர பிரசாதின் உருவப் படத்திற்கு அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். குடியரசுத் தலைவா் மாளிகை அலுவலா்களும் மரியாதை செலுத்தினா்.
பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சுதந்திர இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவரும், தனித்துவ திறமையும் கொண்ட பாரத ரத்னா டாக்டா் ராஜேந்திர பிரசாதின் பிறந்தநாளில் அவரை வணங்கி மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு அவா் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளாா். தேச நலனுக்கு அா்ப்பணிக்கப்பட்ட அவரின் வாழ்க்கை நாட்டு மக்களுக்கு எப்போதும் ஓா் ஊக்க சக்தியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...