ரஷிய கண்டுபிடிப்புகள் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படும்: அதிபர் புதின்

ரஷியாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷிய கண்டுபிடிப்புகள் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படும்: அதிபர் புதின்


ரஷியாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷியா இடையேயான உறவுகள் எதிர்காலத்திலும் வலுப்பெறும் எனவும் அவர் கூறினார். 

இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் தில்லி ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது இரு நாடுகளின் நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. விண்வெளி, ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், இலக்கியம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முன்னதாக பேசிய அதிபர் விளாதிமீர் புதின், ரஷியாவிற்கு இந்தியா சிறந்த நட்பு நாடாக உள்ளதாகக் கூறினார். மேலும் அவர் பேசியதாவது, எதிர்காலத்திலும் இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவானதாகவே இருக்கும்.

இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் உயர் தொழில்நுட்ப சாதனங்கல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். வேறு எந்த நாட்டுடனும் இல்லாத வகையில் ராணுவம், தொழில்நுட்பம், வணிகத்தில் இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்பை ரஷியா வழங்கி வருகிறது.

இரு நாடுகளின் முதலீடுகள் 38 பில்லியன் டாலராக உள்ள நிலையில் ரஷிய தரப்பில் மேலும் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் உற்பத்தி தளவாடங்களில் இந்தியாவிற்கு ரஷியா உதவி வருகிறது.

இரு நாடும் இணைந்து தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சியை காண உள்ளன. அவை இந்தியாவிலும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com