விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்

குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்
விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்


புது தில்லி: குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, விமானப் படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில்,  முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியாகினர்.

நாடாளுமன்றத்தின் மக்களவை இன்று கூடியதும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா  இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து தெரிவித்தார். 

பிறகு, ஹெலிகாப்டர் விபத்து குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர் நேற்று குன்னூர் அருகே விழுந்து விபத்துக்குள்ளாது. இதில், கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேர் பலியாகினர். வருண் சிங் உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு வெலிங்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உயரிய சிகிச்சை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி உயிரிழந்தார் என்பதை துக்கத்துடன் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் பலியான விபின் ராவத்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.  இந்த விபத்து குறித்து விமானப் படை தளபதி தலைமையில்  விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

பிறகு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனது இறுதி அஞ்சலியை செலுத்தும் விதமாகப் பேசினார்.  அவையில் விபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்களவை உறுப்பினர்கள் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், இந்த துக்ககரமான செய்தியை தெரிவித்தார். பிறகு அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com