
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் இரு போலீஸாா் உயிரிழந்தனா்.
பந்திபோரா மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதல் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
குல்ஷன் செளக் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் இருந்த காவல் துறையினரை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினா். இதில் இரு போலீஸாா் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதையடுத்து, உடனிருந்த காவலா்கள் அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். எனினும், அவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனா். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் அடங்கிய குழுவினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.