விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கு பயணிகளிடம் ரூ.5,000 கேட்டது ஏன்?

நடிகையும், எம்எல்ஏவுமான ரோஜா மற்றும் சில ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனியார் விமானத்தில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
விமானத்தில் தொழிலநுட்பக் கோளாறுக்கு பயணிகளிடம் ரூ.5,000 கேட்டது ஏன்?
விமானத்தில் தொழிலநுட்பக் கோளாறுக்கு பயணிகளிடம் ரூ.5,000 கேட்டது ஏன்?


அமராவதி: நடிகையும், எம்எல்ஏவுமான ரோஜா மற்றும் சில ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனியார் விமானத்தில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

திருப்பதியில் இறங்க வேண்டிய விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

முதலில், வானிலை மோசமாக இருப்பதால், விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகுதான் தொழில்நுட்பக் கோளாறு என்று கூறப்பட்டுள்ளது.

இதெல்லாம் விமானப் போக்குவரத்தில் சகஜம்தான் என்றாலும், பிறகு நடந்ததுதுன் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பெங்களூருவில் விமானம் தரையிறங்கியதும், விமானத்திலிருந்து பயணிகளை வெளியே இறங்க அனுமதிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு பயணிக்கும் தலா ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று தனியார் விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கு, அந்த விமானத்திலிருந்த ஒஎஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.கே. ரோஜா உள்பட அனைத்துப் பயணிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து ரோஜா கூறுகையில், இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் தனியார் விமான நிறுவனம் கையாண்ட விதம் மிக மோசமாக இருந்தது. அந்த விமான நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துப் பயணிகளுமே வலியுறுத்தினர். இந்த விமானம் ராஜமகேந்திரவரத்திலிருந்து திருப்பதிக்குச் சென்றுள்ளது. இரண்டுமே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விமான நிலையங்கள். செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு விமானம் புறப்பட்டது. 10.3க்கு திருப்பதிக்குச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது திருப்பதிக்குச் சென்றடையவில்லை. சிறிது நேரம் வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது.

அப்போது, "விமானத்தின் கதவுகள் திறக்கப்படவேயில்லை. விமானப் பணிப்பெண்களோ, விமான நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவலுக்காக காத்திருப்பதாகக் கூறுகிறார்கள்" என்று ரோஜா ஊடகங்களுக்கு அனுப்பிய விடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.

கடைசியாக, அந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. ஆனால், கதவுகளைத் திறக்காமல், விமான நிறுவன ஊழியர்கள், ஒவ்வொரு பயணியும் தனித்தனியாக ரூ.5,000 கொடுக்க வேண்டும். அப்போதுதான் கதவுகளை திறந்து கீழே இறங்க அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். 

இதனை எதிர்த்துப் பயணிகள் குரல் எழுப்பினர். இதனால், விமான நிறுவன ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படியே சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தினர் என்கிறார் அவர்.

இறுதியாக, பயணிகள் யாரும் கூடுதலாக பணம் கொடுக்கவே முடியாது என்று கூறிவிட்டதால், அவர்களும் மனம்மாறி எங்களை விமானத்திலிருந்து தரையிறங்க அனுமதித்தனர். 

இது குறித்து தனியார் விமான நிறுவனம் தங்கள் தரப்புக் கருத்தைக் கூறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com