காங்கிரஸ் எம்எல்ஏவின் பாலியல் சர்ச்சை கருத்து: அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம்

பாலியல் வல்லுறவு குறித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் கருத்துக்கு பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் எம்எல்ஏவின் பாலியல் சர்ச்சை கருத்து: அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம்

பாலியல் வல்லுறவு குறித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் கருத்துக்கு பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டபோது, 'அனைவருக்கும் நேரம் ஒதுக்கினால் அவையை எப்படி நடத்த முடியும்?' என பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே கேள்வி எழுப்பியதுடன், 'நிலைமை கைமீறி போய்விட்டது. அவையை நடத்துவதே சிரமமாக உள்ளது. எனவே நடப்பதை அப்படியே விட்டுவிடலாம் என்றிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர். ரமேஷ் குமார், 'ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் வல்லுறவைத் தடுக்க முடியாவிட்டால் அமைதியாக அனுபவிக்க வேண்டும் என்று. அந்த நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள்' என்று கூறியுள்ளார். இதையடுத்து மற்ற எம்எல்ஏக்கள் சிரித்துள்ளனர். 

ஆனால், பின்னர் இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பெண்கள் நல அமைப்புகள் பல இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுகுறித்து, 'காங்கிரஸ் தலைவர் பேசியது வெட்கக்கேடானது. பெண்கள் வளர்ச்சி குறித்து காங்கிரஸ் பேசுவதற்கு பதிலாக, பெண்களை இழிவுபடுத்திய காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார். 

ஆனால், பாலியல் குறித்த சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர். ரமேஷ் குமார் சட்டப்பேரவையில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். 'எனது கருத்து பெண்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதில் எந்த பிரச்னையும் இல்லை; இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறியுள்ளார். 

எம்எல்ஏ மன்னிப்பு கேட்டுவிட்டதால் இதைப்பற்றி மேலும் பேச வேண்டாம் என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com