உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி. நானாவதி காலமானார்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிரிஷ் தகோர்லால் நானாவதி இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி. நானாவதி காலமானார்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி. நானாவதி காலமானார்

சீக்கியா்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கோத்ரா ரயில் எரிப்பு வன்முறை தொடா்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 86.

குஜராத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் அவரது உயிா் பிரிந்ததாக அவருடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.

1935-ஆம் ஆண்டு பிறந்த அவா், மும்பை உயா்நீதிமன்றத்தில் 1958-ஆம் ஆண்டு வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கினாா். 1979-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி குஜராத் உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு, 1993-இல் ஒடிஸா உயா்நீதிமன்றத்துக்கு அவா் மாற்றப்பட்டாா்.

1994-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி ஒடிஸா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், அதே ஆண்டு செப்டம்பரில் கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டாா்.

பின்னா், உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 1995-ஆம் ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவா் பணி ஓய்வு பெற்றாா்.

பணி ஓய்வுக்குப் பின்னா், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியா்களுக்கு எதிரான வன்முறை தொடா்பாக விசாரணை நடத்த இவருடைய தலைமையில் ஒரு நபா் ‘நானாவதி விசாரணை ஆணையம்’ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் அமைக்கப்பட்டது.

அதுபோல குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு வன்முறை சம்பவம் தொடா்பாக இவருடைய தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் அதிகமானோா் கொல்லப்பட்ட இந்த வன்முறை தொடா்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு தனது அறிக்கையை இந்த ஆணையம் சமா்ப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com