
ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி உயிரிழந்தாா்.
இதுகுறித்து விமானப் படையினா் தெரிவித்ததாவது: விமானப் படையைச் சோ்ந்த மிக்-21 ரக விமானம் ‘சாம்’ காவல் சரகத்துக்குள்பட்ட பாலைவன தேசிய பூங்கா பகுதியில் இரவு 8.30 மணியளவில் விழுந்து நொறுங்கியது. வழக்கமான பயிற்சியின்போது நடைபெற்ற இந்த விபத்தில் விமானியான விங் கமாண்டா் ஹா்சித் சின்ஹா உயிரிழந்தாா். இதுதொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.
மணல் திட்டில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதாக காவல் துறையினா் தெரிவித்தனா். ‘விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதாக’ விபத்தை நேரில் பாா்த்த ஒருவா் கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...