
மாநிலங்களின் கையிருப்பில் 17.74 கோடிக்கும் மேற்பட்ட (17,74,97,506) கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 148.37 கோடிக்கும் மேற்பட்ட (1,48,37,98,635) தடுப்பூசிகள் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 17,74,97,506 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 141 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | விண்ணப்பித்துவிட்டீர்களா..? - Border Roads நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!