
கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக 85 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,900 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,306 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒமைக்ரான்:
புதிதாக 85 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- இதில் 47 பேருக்கு தேசிய வைராலஜி இன்ஸ்ட்டிடியூட்டில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 47 பேரில் 43 பேர் சர்வதேசப் பயணிகள். 4 பேர் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள். இதில் 34 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.
- மீதமுள்ள 38 பேரில் மும்பையைச் சேர்ந்தவர்கள் 19 பேர்.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.
இதில், ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டவுடன் 99 பேர் வீடு திரும்பினர்.