ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ. 64,180 கோடியில் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்த தற்சார்பு திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:17 am

DIN

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இதில்  தற்சார்பு இந்தியா அல்லது சுயசார்பு இந்தியா திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டம் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக கூறிய அமைச்சர், ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் (சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். 

இது தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். 

இதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 64,180 கோடி ரூபாயில் புதிய மத்திய நிதியுதவித் திட்டமான சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.