
காந்திநகர்: குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஊடகவியலாளருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வகோடியா சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் மது ஸ்ரீவத்சவா. இவர் திங்களன்று காந்திநகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தன்னிடம் சங்கடம் ஏற்படுத்தும் விதமான கேள்விகளைக் கேட்ட ‘மாண்டவ்யா நியூஸ்’ என்னும் இணைய செய்தி சேனலின் நிருபரான அமித் தகோர் என்பவரைப் பார்த்து, ‘கேள்விகளை நேரடியாக கேள். ஏன் புத்திசாலித்தனமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாய்? எனது ஆட்களால் உன்னைக் கொன்று விடுவேன்’ என்று கேமராக்கள் முன்னிலையில் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. மது ஸ்ரீவத்சவா இதற்கு முன்னரும் இரு தடவைகள் இதேபோல் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.