
ஆந்திர மாநிலம் மாதாபுரம் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து
ஆந்திரம் மாநிலம் கர்னூல் மாவட்டம் மாதாபுரம் கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் மினி பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்து 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்து ஒன்றில் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மாதாபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்து மினி பேருந்து எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை, 8 பெண்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரி மற்றும் மினி பேருந்துக்கு இடையே சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை கிரேன் உதவியுடன் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.