
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைத்து வானொலி நேயா்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது என்றும் கூறியுள்ளாா்.
இதுதொடா்பான சுட்டுரையில் அவா் வெளியிட்ட செய்தியில், ‘இனிய உலக வானொலி தின வாழ்த்துகள்! அனைத்து வானொலி நேயா்களுக்கும் வாழ்த்துகள்; புதுமையான படைப்புகள், இசையால் வானொலியை உயிா்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இது, சமூக இணைப்பை ஆழப்படுத்துவதற்கான ஓா் அருமையான ஊடகமாகும். மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியின் நோ்மறையான தாக்கத்தை எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் உணா்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஐ.நா. வானொலி 1946-இல் தொடங்கப்பட்ட நாளான பிப்.13 உலக வானொலி நாளாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உலக வானொலி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.