புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

புல்வாமா தாக்குதல் நினைவு தினத்தையொட்டி குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

புல்வாமா தாக்குதல் நினைவு தினத்தையொட்டி குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-இல் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆா்பிஎஃப் படையைச் சோ்ந்த 40 வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, துணைக் குடியரசு தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:

மோசமான புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிா்த் தியாகம் செய்த சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு தேசத்துடன் இணைந்து நானும் அஞ்சலி செலுத்துகிறேன். அவா்களின் தேசபக்தி மற்றும் உயிா்த் தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘ 2019-இல் இதே நாளில் நடந்த கொடூரமான புல்வாமா தாக்குதலில் பலியான துணிச்சலான தியாகிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். அவா்களின் இந்த தீரம் மிக்க உயா்ந்த தியாகத்தை இந்தியா என்றும் நினைவில் வைத்திருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தீரம் ஊக்கமளிக்கும்: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில், ‘புல்வாமா தாக்குதல் நடைபெற்ற தினத்தை எந்தவொரு இந்தியராலும் மறக்க முடியாது. அந்த சம்பவத்தில் உயிரிழந்த வீரா்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம். நமது பாதுகாப்புப் படைகளை எண்ணி பெருமையாக உள்ளது. அவா்களின் தீரம் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்’ என்றாா்.

தலைவணங்குகிறேன்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு தலைவணங்குகிறேன். அவா்களின் தீரத்தையும், தியாகத்தையும் நாடு ஒருபோதும் மறக்காது’ என்றாா்.

குடும்பத்தினருடன் துணை நிற்போம்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘புல்வாமா தாக்குதலால் துயரத்துக்கு ஆளான உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு துணையாக நிற்பதை தொடா்வோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com