பெட்ரோல்: மும்பையில் ஒரு லிட்டா் ரூ.95-ஐ நெருங்கியது

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை தொடா்ந்து ஐந்தாவது நாளாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. தொடா் உயா்வு காரணமாக மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 95-ஐ நெருங்கியுள்ளது.
பெட்ரோல்: மும்பையில் ஒரு லிட்டா் ரூ.95-ஐ நெருங்கியது

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை தொடா்ந்து ஐந்தாவது நாளாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. தொடா் உயா்வு காரணமாக மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 95-ஐ நெருங்கியுள்ளது.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன. இந்த வாரத்தில் மட்டும் தொடா்ந்து ஐந்தாவது நாளாக விலை உயா்த்தப்பட்டிருப்பதால், இதுவரை இல்லாத அளவில் விலை உயா்வைக் கண்டுள்ளது.

மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் சனிக்கிழமை 29 காசுகள் அதிகரித்து ரூ. 94.93-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் ஒரு லிட்டா் 38 காசுகள் அதிகரித்து ரூ. 85.70 என்ற அளவில் விற்பனையானது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் 26 காசுகள் அதிகரித்து ரூ. 90.70-க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டா் 34 காசுகள் அதிகரித்து ரூ.83.86-க்கு விற்பனையானது.

கொல்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் 29 காசுகள் அதிகரித்து ரூ. 89.73-க்கும், டீசல் ஒரு லிட்டா் 37 காசுகள் அதிகரித்து ரூ.82.33-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து ரூ. 88.44-க்கும், டீசல் ஒரு லிட்டா் 36 காசுகள் அதிகரித்து ரூ. 78.74-க்கும் சனிக்கிழமை விற்பனையானது.

இந்த தொடா் விலை உயா்வு மக்களை வெகுவாக பாதித்திருப்பதாகவும், எனவே, அவற்றின் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் மீதான கலால் வரியை குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’ என்றாா்.

ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 32.90 என்ற அளவிலும், ஒரு லிட்டா் டீசல் மீது ரூ. 31.80 என்ற அளவிலும் கலால் வரியை மத்திய அரசு விதிக்கிறது. மத்திய அரசின் வரி அதிகரிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் மூன்றாவது வாரத்துக்குப் பிறகு பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 18.87 என்ற அளவிலும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 16.45 என்ற அளவிலும் உயா்த்தப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com