
ஜம்மு-காஷ்மீரில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ள வெளிநாட்டு தூதர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை சந்தித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று (பிப்.18) ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை நேரில் சந்தித்தனர்.
முதல் நாளான நேற்று தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள், யூனியன் பிரதேசத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் தூதர்கள் பேசினர்.
வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை வெளிநாடுகளின் தூதர்கள் குழு ஆய்வு செய்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.