குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 20 தொழிலாளர்கள் காயம் 

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 20 தொழிலாளர்கள் காயம் 

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் பிரிவில் அதிகாலை 2 மணியளவில் ஜகாடியா தொழில்துறை பகுதியில் மருந்துகள் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபடும்போது தீ விபத்து ஏற்பட்டு வெடித்ததாகக் காவல் ஆய்வாளர் பி.எச்.வாசவா தெரிவித்தார். 

இந்த வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும், அது அந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள மக்களால் வெடிப்பு சப்தம் உணரப்பட்டது. 

இந்த விபத்தில் குறைந்தது 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் பருச் மற்றும் அங்கலேஷ்வர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 12 பேர் ஆரம்ப சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினர். 

சம்பவ இடத்துக்கு சுமார் 15 தீயணைப்பு டெண்டர்கள் விரைந்தன. மேலும் போராடி காலை 6.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com