ஏப்ரல் 6 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 6 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையம்
ஏப்ரல் 6 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையம்

புது தில்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 

தமிழகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 19 கடைசி நாள். 

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும்.

வேட்பு மனுவை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள்.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டு வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மட்டும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்துக்கான தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் மற்றும் சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com