கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு

கேரள மாநிலத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், அசாமில் 126 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அதில் கேரள மாநிலத்தில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கும்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 19 கடைசி நாள். 
வேட்பு மனுவை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள்
ஏப்ரல் 6-ஆம் தேதி கேரளம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


அதேபோல் மலப்புரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மே 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com