
சத்தீஸ்கரில் 10 மாதங்களில் 141 விவசாயிகள் தற்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் 141 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் ரவீந்திர செளபே சனிக்கிழமை தெரிவித்தார்.
சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் தர்மலால் கெளசிக் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்தீஸ்கர் மாநில வேளாண் துறை அமைச்சர், “பல்வேறு காரணங்களால் கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் 2021 பிப்ரவரி வரையிலான காலத்தில் மாநிலம் முழுவதும் 141 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளும் அரசு விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மேலும் விவசாயிகளின் தற்கொலையை விசாரணை செய்து அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளன.