
தில்லியில் இன்று புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் இன்று மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 67,484 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 45,873 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 21,611 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 3 உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 10,909-ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 164 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,26,876-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,307 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 627 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,315 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.