
சிங்கு எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
புதுதில்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லி எல்லையில் 94-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியின் எல்லைப் பகுதிகளாக சிங்கு, திக்ரி, காஜியாபாத் பகுதிகளில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் 94 -ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசை எதிா்த்து 94 -ஆவது நாளாக போராடி வரும் விவசாயிகள், எங்கள் பிரச்னையை தீா்ப்பதற்கு மத்திய அரசு எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். எங்கள் உரிமைகளைப் பெறாமல் நாங்கள் இந்த இடத்தைவிட்டு போகமாட்டோம் என்று கூறிவருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...