
கோப்புப்படம்
மத்தியப் பிரதேசத்தில் காவல்துறைக்குச் சொந்தமான வாகனம் மின்மாற்றியின் மீது மோதி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் காவலர்கள் இருவர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்டோல் காவல்நிலையத்திலிருந்து சப்பாரா காவல் நிலையத்திற்கு காவலர்கள் இருவர் சென்றுகொண்டிருந்தனர்.
பெளடி பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மின்மாற்றி கம்பத்தின் மீது மோதி கிணற்றில் விழுந்து கவிழ்ந்தது.
இதில் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டனர்.
பன்டோல் காவல்நிலைத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை முடித்து சப்பாரா காவல் நிலையத்திற்கு காவலர்கள் இருவர் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாக பன்டோல் காவல்நிலையம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...