
கோப்புப்படம்
மேற்கு வங்கத்தில் இரவோடு இரவாக பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்தது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக அலுவலகத்திலிருந்த பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் பரநகர் பகுதியில் செயல்பட்டு வந்த பாஜக அலுவலகம் மீது நேற்று (பிப்.26) மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அலுவலகத்தின் வாயில்களில் வைக்கப்பட்டிருந்த பதாகை, விளம்பரப் பலகைகள் சேதமடைந்தன.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், கட்சி நிர்வாகி ஒருவரை தாக்கியதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...