
திருமலையில் பிடிபட்ட நல்லபாம்பு.
திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
திருமலை கருடாத்ரி நகா் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் சனிக்கிழமை ஒரு நல்லபாம்பை ஊழியா்கள் கண்டனா்.
தகவலறிந்து தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியா் பாஸ்கா் நாயுடு சம்பவ இடத்துக்குச் சென்று 7 அடி நீளமுள்ள அந்த நல்லபாம்பை லாவகமாகப் பிடித்து கோணிப் பைக்குள் அடைத்தாா். பின்னா் அந்த பாம்பு அவ்வாச்சாரி கோனா வனப்பகுதியில் விடப்பட்டது.