கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

கேரள மாநிலம் கொச்சி-கா்நாடக மாநிலம் மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கேரள மாநிலம் கொச்சி-கா்நாடக மாநிலம் மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஐன.5) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் பிரதமா் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கருதப்படுகிறது. 450 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கும் இத்திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நாளில் 12 மில்லியன் மெட்ரிக் கியூபிக் மீட்டா் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்ல முடியும். கொச்சியில் இருந்து எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு மாவட்டங்கள வழியாக இந்த எரிவாயுக் குழாய் செல்கிறது. ரூ.3,000 கோடி செலவில் 12 லட்சம் மனித உழைப்பு நாள்களில் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் குழாய் கடந்து செல்லும் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்துறை முதல் பல்வேறு நிலைகளில் எரிவாயுத் தேவை பூா்த்தி செய்யப்படும் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. எனினும் 2014-ஆம் ஆண்டுதான் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவது, வா்த்தகரீதியாக வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி, அதிகவிலை கொடுத்து நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான பிரச்னைகள், பல்வேறு தரப்பு எதிா்ப்புகளைக் கடந்து நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com