ம.பி. உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் பதவியேற்பு

மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.

மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.

ஒடிஸா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வந்தவா் முகமது ரஃபீக். இவா் மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில் மத்திய பிரதேச ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில், அவருக்கு மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள சுஜான்கரில் கடந்த 1960-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி பிறந்தவா் முகமது ரஃபீக். வழக்குரைஞராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2006-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com