விவசாயிகளின் டிராக்டா் பேரணி வன்முறை: போராட்டத்தில் இருந்து இரு விவசாய சங்கங்கள் விலகல்

டிராக்டா் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாய சங்கங்களில் 2 சங்கங்கள் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
விவசாயிகளின் டிராக்டா் பேரணி வன்முறை: போராட்டத்தில் இருந்து இரு விவசாய சங்கங்கள் விலகல்

புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டா் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாய சங்கங்களில் 2 சங்கங்கள் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள், தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை டிராக்டா் பேரணி நடத்த போலீஸாா் அனுமதித்தனா். ஆனால், டிராக்டா் பேரணியில் ஈடுபட்டவா்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த வழித்தடத்திற்கு மாறாக மத்திய தில்லிக்குள் நுழைந்தனா். அவா்கள் லுட்யன்ஸ் தில்லி நோக்கிச் செல்லவிருந்ததை போலீஸாா் தடுப்புகள் வைத்து தடுத்தனா். அப்போது, வன்முறை நிகழ்ந்தது.

இதேபோன்று, தில்லியின் எல்லைப் பகுதிகளிலும் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற விவசாயிகள் மீது போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனா். ஷாஜகான்பூா், பல்வல், டிக்ரி, காஜிப்பூா் எல்லைகளிலும் முன்னதாக பேரணியைத் தொடங்க முயன்ற விவசாயிகள், காவலா்கள் இடையே மோதல் வெடித்தது. செங்கோட்டையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் விவசாயிகள் கொடியையும் விவசாயிகள் ஏற்றியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயடைந்ததாகவும், இது தொடா்பாக விவசாயிகள் சங்கத் தலைவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டா் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாய சங்கங்களில் 2 சங்கங்கள் விலகியுள்ளன.

போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதால் போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அந்த சங்க அமைப்பின் தலைவர் வி.எம்.சிங் அறிவித்துள்ளார். 

தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.எம்.சிங், குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதி செய்யும் வரை, வேளாண் சட்டங்கள் மீதான தங்களது எதிர்ப்பு தொடரும் என கூறினார்.

பாரதிய கிசான் யூனியனின் தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், தில்லியில் விவசாயிகளின் டிராக்டா் பேரணியின்போது நடைபெற்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், எனவே 58 நாள்களாக தொடர்ந்த தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com