மேலும் ஒரு கரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு சீரம் நிறுவனம் விண்ணப்பம்

சீரம் நிறுவனம் மேலும் ஒரு கரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா தெரிவித்தாா்.

சீரம் நிறுவனம் மேலும் ஒரு கரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியது:

அமெரிக்காவின் நோவாவாக்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமும், சீரம் நிறுவனமும் இணைந்து ‘கோவோவேக்ஸ்’ என்ற கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்தத் தடுப்பூசியின் பரிசோதனையிலும் சிறப்பான முடிவுகள் கிடைத்துள்ளன. அந்தத் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதத்துக்குள் அந்தத் தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாக தெரிவித்தாா்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் கரோனா தீநுண்மிக்கு எதிராக உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இந்தியாவில் மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து இதுவரை 1.1 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

கடந்த ஜன.16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மருத்துவப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com