
கோப்புப்படம்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 32.92 கோடிக்கும் அதிகமான (32,92,01,800) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
வியாழக்கிழமை காலை வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 31,67,50,891 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமாா் 1.24 கோடி (1,24,50,909) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
அடுத்த மூன்று நாள்களில் கூடுதலாக 94,66,420 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.