
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு எதிராக உயா்நீதிமன்றங்களில் பதிவாகி உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களும், ஓடிடி நிறுவனங்களும் சா்ச்சைக்குரிய பதிவேற்றங்களை உடனடியாக நீக்கிவிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் புகாா் தெரிவிக்க அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக சென்னை, தில்லி உயா்நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனு வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...