
நாட்டில் கரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு கடந்த 90 நாள்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 553 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா்.
மேலும் 34,703 போ் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனா். இது கடந்த 111 நாள்களில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச தினசரி பாதிப்பாகும்.
மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 101 நாள்களுக்குப் பிறகு 4,64,357 ஆக குறைந்துள்ளது. இதுவரை 2,97,52,294 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் (3,06,19,932 போ்) தற்போது சிகிச்சை பெறுபவா்களின் விழுக்காடு 1.52 சதவீதமாகும்.
தொடா்ந்து 54-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குணமடைந்தவா்களின் விழுக்காடு 97.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 42.14 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 35.75 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கரோனாவால் இதுவரை 4,03,281 போ் உயிரிழந்துவிட்டனா்.
கரோனா பரவல் அதிகமுள்ள 14 மாநிலங்கள்
(மாவட்ட அளவில் - ஜூலை 5 நிலவரப்படி)
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக கடந்த மே 6}ஆம் தேதி 4 லட்சத்தைக் கடந்து பதிவாகிய நிலையில், தற்போது 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. எனினும், தினசரி பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம், மகாராஷ்டிரம் முதலிடம் வகிக்கின்றன. திங்கள்கிழமை (ஜூலை 5) பதிவான தினசரி பாதிப்பு 39,796}இல் 80 சதவீத பாதிப்புகள் 14 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்களில் உள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...