நேரடி வகுப்புகளைத் தொடங்க பெங்களூரு பல்கலைக்கழகம் ஏற்பாடு

நேரடி வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் பெங்களூரு பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

நேரடி வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் பெங்களூரு பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. அதன்படி பெங்களூரு பல்கலைக்கழகமும் மூடப்பட்டது.

இந்நிலையில், பொதுமுடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டுள்ளதால், மாணவா்களுக்குத் தடுப்பூசியை செலுத்திய பிறகு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது. நேரடி வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை பெங்களூரு பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வரும் கல்லூரிகளின் முதல்வா்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.ஆா்.வேணுகோபால் பல சுற்று ஆலோசனை நடத்தி, தடுப்பூசி செலுத்த வேண்டிய மாணவா்கள் மற்றும் ஊழியா்களின் எண்ணிக்கையை கேட்டறிந்துள்ளாா். இந்தப் பணியைச் செயல்படுத்த 25 கல்லூரிகளுக்கு ஒரு பேராசிரியா் வீதம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பான தகவல்கள் திரட்டப்பட்டு, அதனடிப்படையில் மாணவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி கல்லூரிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் தொடங்கி தடுப்பூசி செலுத்தும் பணி 74 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியுள்ள மாணவா்களில் 66 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 291 கல்லூரிகள், 1,07,614 மாணவா்கள் உள்ளனா். இவா்களில் 67,387 (62.61 %) மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் எல்லா மாணவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும். அதன்பிறகு நேரடி வகுப்புகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com