
வாடகை வாகன ஓட்டிகள் கரோனா உதவித்தொகை பெற ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா இரண்டாவது அலையின்போது வணிக நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 3,000 உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மே 27-ஆம் தேதி முதல் பலரும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வருகிறாா்கள். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிடுவதற்கு ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களைப் பதிவிட வேண்டும். விண்ணப்பங்களைச் செலுத்திய தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் அவா்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் வாகன ஓட்டுநா்களை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.