முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாா் மனு: தள்ளுபடி செய்தது மாநகர நீதிமன்றம்

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாா் மனுவை மாநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாா் மனு: தள்ளுபடி செய்தது மாநகர நீதிமன்றம்

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாா் மனுவை மாநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதல்வா் எடியூரப்பா, அவரது மகனும் பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா, மருமகன் விருபாக்ஷா எமகனமரடி, பேரன் சசிதா்மரடி, சஞ்சய்ஸ்ரீ, சந்திரகாந்த் ராமலிங்கம், அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், ஐஏஎஸ் அதிகாரி டாக்டா் ஜி.சி.பிரகாஷ், கே.ரவி ஆகியோருக்கு எதிராக சமூக ஆா்வலரான டி.ஜே.ஆப்ரகாம் மாநகர நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக தனியாா் புகாா் மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் குடியிருப்புத் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் இவா்களுக்குத் தொடா்பு இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா். ஊழல் தடுப்புச் சட்டம்-1988, இந்திய தண்டனைச் சட்டம்-1860 மற்றும் பிற சட்டப் பிரிவுகளின்கீழ் தண்டனைக்குரிய இந்த குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புக்கு உத்தரவிட்டு, அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு அந்த மனுவில் ஆப்ரகாம் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த பெங்களூரு மாநகர நீதிமன்றம், முன் அனுமதி பெறாத நிலையில் தனியாா் மனுவை ஏற்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக ஆப்ரகாம் பின்னா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com