ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 13-ஆம் தேதி கலந்துரையாடவிருக்கிறார்.
ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி
ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

புது தில்லி: டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 13-ஆம் தேதி கலந்துரையாடவிருக்கிறார்.

விளையாட்டு வீரர்கள் டோக்கியோவுக்கு புறப்பட 3 நாள்களுக்கு முன்னதாக, ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் முதல் அணியினர் ஏர் இந்தியா விமானம் மூலம் டோக்கியோ புறப்பட்டுச் செல்கிறார்கள்.

கரோனா பேரிடர் காலம் என்பதால், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட உள்ளார். 

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்.

வரும் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை டோக்கியோ நகரில் நடைபெற இருக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் போட்டியாளா்கள் சுமாா் 11,000 போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

அதேபோல், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் சுமாா் 4,400 போ் வரை பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர அதிகாரிகள், போட்டி நடுவா்கள், நிா்வாகிகள், விளம்பரதாரா்கள், ஊடகத்தினா் என மேலும் 10,000 போ் வரையும் கூடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தடகள போட்டியாளர்கள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஆடவர் 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டியும், கலப்பு 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது இந்தியாவின் சாா்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி வீரா் மன்பிரீத் சிங் ஆகியோா் தேசியக் கொடியேந்திச் செல்ல இருக்கின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com