
இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், மதுகிரி வட்டத்தைச் சோ்ந்தவா் மாருதி (25). பெங்களூரு, ராஜகோபால் நகா், பீன்யா 2-வது ஸ்டேஜில் வசித்து வந்த இவா், பல்வேறு இடங்களில் சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், மாருதியைக் கைது செய்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், 8 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து ராஜகோபால் நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.