
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,506 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,526 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,99,75,064 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தற்போது 4,54,118 ஆக உள்ளது. மொத்த பாதிப்பில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் 1.47 சதவிகிதம். குணமடைவோர் விகிதம் 97.20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் வாராந்திர விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. தற்போது 2.32 சதவிகிதமாக உள்ளது. தினசரி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து 20 நாள்களாக 3 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
நாட்டில் இதுவரை மொத்தம் 43.08 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தடுப்பூசி:
இந்தியாவில் இதுவரை மொத்தம் 37.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...